சி.பி.எஸ்.இ. வினாத்தாள் தொடர்பாக பிரதமர் மோடி கருத்து தெரிவிக்க வேண்டும்- காங். வற்புறுத்தல்

சி.பி.எஸ்.இ. வினாத்தாள் வெளியான விவகாரத்தில் பிரதமர் மோடி கருத்து தெரிவிக்க வேண்டும் என்ற காங்கிரஸ் தலைவர் பவன் கேரா வலியுறுத்தி உள்ளார். #CBSEPaperLeak
சி.பி.எஸ்.இ. வினாத்தாள் தொடர்பாக பிரதமர் மோடி கருத்து தெரிவிக்க வேண்டும்- காங். வற்புறுத்தல்
Published on

புதுடெல்லி:

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொருளாதார தேர்வுக்கான வினாத்தாளும், 10-ம் வகுப்பு கணித தேர்வு வினாத்தாளும் முன்கூட்டியே வெளியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பவன் கேரா, சி.பி.எஸ்.இ. வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியானது மிகவும் தீவிரமான பிரச்சினை என்றும், இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இந்த பிரச்சினை குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

மாணவர்களும், பெற்றோரும் குழப்பத்தில் இருப்பதால் இந்த விவகாரம் குறித்து தெளிவுபடுத்த வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். #CBSE #CBSEPaperLeak

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com