

புதுடெல்லி:
ராஜஸ்தான், குஜராத் என பல மாநிலங்களில் ஆசிரமங்களை நடத்தி வந்த ஆசாராம் பாபு சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் இன்று குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடி ஆசாராம் பாபுவுடன் ஒரே மேடையில் இருப்பது போன்ற புகைப்படங்களை தனது டுவிட்டர் வலைதளத்தில் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, காங்கிரசின் டுவிட்டர் வலைத்தளத்தில், ஒருவர் அவர் இருக்கும் இடத்தை வைத்து மதிப்பிடப்படுகிறார் என குறிப்பிட்டு குற்றவாளி ஆசாராம் பாபுவுடன் பிரதமர் மோடி ஒரே மேடையில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் பொது செயலாளர் அசோக் கெலாட் கூறுகையில், உண்மையான துறவிக்கும் ஏமாற்று பேர்வழிக்கும் உள்ள வித்தியாசத்தை பொதுமக்கள் உணர்ந்துள்ளனர் என தெரிவித்துள்ளார். காங்கிரசின் இந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #Asaram #Congress #Tamilnews