அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் நவ்ஜோத் சிங் சித்து

முன்னாள் கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சிங் சித்து, பஞ்சாப் மாநில அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து தான் அனுப்பிய கடிதத்தை இன்று வெளியிட்டார்.
நவ்ஜோத் சிங் சித்து
நவ்ஜோத் சிங் சித்து
Published on

புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரராக அறியப்பட்டவர் நவ்ஜோத் சிங் சித்து. காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த இவர் சமீபத்தில் நடைபெற்ற பஞ்சாப் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அங்கு அமைச்சராகவும் பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவரான நவ்ஜோத் சிங் சித்து, பஞ்சாப் மாநில அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு ஜூன் 10ம் தேதி, தான் அனுப்பிய ராஜினாமா கடிதத்தின் நகலை சித்து டுவிட்டரில் இன்று வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com