

உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி துவங்கி 7 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
பாராளுமன்ற தேர்தலில் வயநாடு, அமேதி ஆகிய 2 தொகுதிகளில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். கடந்த வாரம் கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும், அங்கு காங்கிரஸின் கொடிகளை விட முஸ்லிம் லீக் கட்சியின் பச்சை நிற கொடிகளே அதிகம் பறக்கவிடப்பட்டன. காங்கிரஸ் கட்சி கொடிகள் கண்களுக்கே தெரியாத அளவில் குறைவாகவே இருந்தன.