மேற்கு வங்காளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கை கொடுத்த காங்கிரஸ்

மேற்கு வங்காளம் மாநிலத்தில் நடக்க உள்ள மகேஷ்தலா தொகுதிக்கு நடக்க உள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது. #CIPM #Congress
மேற்கு வங்காளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கை கொடுத்த காங்கிரஸ்
Published on

கொல்கத்தா:

மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள மகேஷ்தலா தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ கஸ்தூரி தாஸ் சமீபத்தில் மரணமடைந்தார். இதனை அடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஆளுங்கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாஜக போட்டியிடுகின்றன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரதாப் சவுத்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் இந்த நடவடிக்கை அம்மாநில அரசியலில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய மாநாட்டில் பாஜகவை வீழ்த்த மற்ற கட்சிகளுடன் ஒன்றினைந்து செயல்படுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. #CIPM #Congress

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com