கோரக்பூர் மருத்துவமனையில் 70 குழந்தைகள் மரணம்: யோகி மீது கொலை வழக்குப் பதிய நடிகர் ராஜ் பாப்பர் வலியுறுத்தல்

கோரக்பூர் மருத்துவமனையில் உரிய கவனிப்பின்றி 70 குழந்தைகள் இறந்ததற்காக, முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மீது கொலை வழக்குப் பதிவுசெய்ய வேண்டும் என நடிகரும், உ.பி. மாநில காங்கிரஸ் தலைவருமான ராஜ் பாப்பர் தெரிவித்துள்ளார்.
கோரக்பூர் மருத்துவமனையில் 70 குழந்தைகள் மரணம்: யோகி மீது கொலை வழக்குப் பதிய நடிகர் ராஜ் பாப்பர் வலியுறுத்தல்
Published on

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக கடந்த ஆறு நாட்களில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மருத்துவமனை முதல்வர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், உ.பி. மாநில காங்கிரஸ் தலைவரும், நடிகருமான ராஜ் பாப்பர், கோரக்பூர் மருத்துவமனையில் உரிய கவனிப்பின்றி 70 குழந்தைகள் இறந்ததற்காக, முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ’’70 குழந்தைகளின் இறப்புக்கு காரணமான முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், இரண்டு சுகாதார துறை மந்திரிகள் மற்றும் இதில் தொடர்புடைய அதிகாரிகள் மீது இந்திய தண்டனை சட்டம் 302 சட்டப் பிரிவின் கீழ் கொலை வழக்குப் பதிவுசெய்ய வேண்டும்.

தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி பேசி வருகிறார். உ.பி.யில் நடந்த சம்பவத்துக்கு அவர் என்ன பதில் சொல்லப் போகிறார்? உ.பி. விவகாரத்தில் அவரது மனதின் குரல் (மன் கீ பாத்) என்ன? குழந்தைகளை கொன்ற யோகி ஆதித்யநாத் அரசை காப்பாற்ற அவர் என்ன பதில் தரப்போகிறார்?

முதல் மந்திரியாக பதவி வகிக்கும் யோகி ஆதித்யநாத், தனது பாராளுமன்ற தொகுதியான கோரக்பூருக்கு எதுவுமே செய்யவில்லை. பின்னர் அவர் எப்படி மாநிலம் முழுவதற்கும் தேவையான வசதிகளை செய்து தருவார்? இறந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு தரவேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com