செங்குன்றம் அருகே மதில்சுவர் இடிந்து ஒருவர் பலி

செங்குன்றம் அருகே புதிய கட்டிடத்தின் மதில்சுவர் இடிந்து ஒருவர் பலியானார். பெண் உள்பட 6 பேர் காயம் அடைந்துள்ளனர்.
பலி
பலி
Published on

செங்குன்றம்:

சென்னை அமைந்தகரையை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 54). இவர் செங்குன்றத்தை அடுத்த பம்மதுகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் கெங்கையம்மன் கோயில் பின்புறம் சுமார் 50 சென்ட் இடத்தை வாங்கி இருந்தார். அந்த இடத்தை சுற்றிலும் ஏழு அடி உயரமுள்ள மதில் சுவர் எழுப்பும் பணியை கடந்த ஒரு வாரமாக செய்து வருகிறார்.

இந்த சுவர் எழுப்பும் பணியில் செங்குன்றத்தை அடுத்த பொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன் (50), எல்லம்மன் பேட்டையைச் சேர்ந்த குமார் (45), செங்கல்பட்டு எஸ்.பி கோவில் தெருவை சேர்ந்த முத்து (44), பொத்தூர் வள்ளிவேல் நகரைச் சேர்ந்த லலிதா (50), செங்குன்றத்தை அடுத்த பொத்தூர் விஜய்கார்டனைச் சேர்ந்த செல்லப்பன் (52), உள்ளிட்ட 7 பேர் வேலை செய்துகொண்டிருந்தனர்.

நேற்று மாலை 6 மணி அளவில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் 7 பேரும் அடியில் சிக்கிக் கொண்டனர். பலத்த காடம் அடைந்த அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் சிகிச்சை பலனின்றி செல்லப்பன் பரிதாபமாக இறந்தார். காயம் அடைந்த மற்ற 6 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக புழல் உதவி கமி‌ஷனர் ரவி செங்குன்றம் இன்ஸ்பெக்டர் ஜவஹர் பீட்டர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com