

வாஷிங்டன்:
“மேக் அமெரிக்கா கிரேட் அகைன்” (மீண்டும் அமெரிக்காவை பெரியதாக மாற்றுவோம்) என்ற வாக்குறுதியுடன் அதிபரான டிரம்ப், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை சமீபத்தில் உயர்த்தினார்.
இறக்குமதி செய்யப்படும் இரும்பு மீது 25 சதவிகிதமும், அலுமினியம் மீது 10 சதவிகிதமும் வரி அதிகரித்து அவர் நடவடிக்கை மேற்கொண்டார். மேலும், ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீதான வரியையும் உயர்த்தப்போவதாக மிரட்டி வருகிறார். இந்த வரி உயர்வுக்கு சொந்த கட்சி உறுப்பினர்களே எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர்.
அமெரிக்காவுக்கு ஆண்டுதோறும் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான இரும்பு மற்றும் அலுமினியம் இந்தியா ஏற்றுமதி செய்கிறது. வரி உயர்வால் இந்தியாவின் வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால், இந்தியா உள்பட 17 நாடுகள் டிரம்ப் முடிவுக்கு அதிருப்தியை தெரிவித்துள்ளன.
வரி உயர்வு காரணத்தால் அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் உள்நாட்டிலேயே இரும்பு கொள்முதல் செய்யும் பட்சத்தில் உள்நாட்டு பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்பது டிரம்ப்பின் கணிப்பாக உள்ளது. ஆனால், இறக்குமதி வர்த்தகத்தால் கிடைக்கும் அந்நியச்செலாவணி குறைய வாய்ப்பு இருப்பதாகவும் ஆளும் குடியரசு கட்சியினர் கூறியுள்ளனர்.
அமெரிக்கா உடன் மூன்றாவது மற்றும் நான்காவது பெரிய வர்த்தக உறவில் இருக்கும் மெக்சிகோ மற்றும் கனடாவுக்கு இந்த வரி உயர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #TrumpTariffs #TamilNews