தனியார் ஓட்டலில் நீச்சல் குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

தனியார் ஓட்டலில் நீச்சல் குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
தனியார் ஓட்டலில் நீச்சல் குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
Published on

கோவை:

தனியார் ஓட்டலில் நீச்சல் குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை சுந்தராபுரம் சி.டி.ஓ.காலனியை சேர்ந்தவர் நாகேந்திர பிரசாத். இவருடைய மகன் சாய் கிருஷ் ணன் (வயது 20). இவர் பொள்ளாச்சி சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்தநிலையில் இவர் நீச்சல் பழகுவதற்காக கோவை உக்கடம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்ட லுக்கு நேற்று முன்தினம் மதியம் 12.30 மணியளவில் வந்தார். அவர் அந்த ஓட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் அடித்துக்கொண்டு இருந்தார்.

அப்போது அவர் திடீரென்று தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயிற்சியாளர்கள் அவரது உடலை மீட்டு வெளியே கொண்டு வந்த னர். இது குறித்து உக்கடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

நீச்சல் பழக வந்த சாய் கிருஷ்ணனுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com