கேரளாவில் கனமழை எதிரொலி - கொச்சி விமான நிலையம் மூடல்

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக ரன்வேயில் தண்ணீர் சூழ்ந்ததால் கொச்சி விமான நிலையம் நள்ளிரவு வரை மூடப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொச்சி விமான நிலையம்
கொச்சி விமான நிலையம்
Published on

திருவனந்தபுரம்:

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளா மற்றும் தமிழகத்தின் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. 

கேரளாவின் இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு பகுதிகளுக்கு இன்று கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டது. இதன் காரணமாக இடுக்கி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சூர், பாலக்காடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய பகுதிகளுக்கும் எச்சரிக்கை விடப்பட்டது.

இந்நிலையில், கேரளா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கொச்சி விமான நிலையம் நள்ளிரவு வரை மூடப்படும் என அறிவித்துள்ளது. ரன்வேயில் தண்ணீர் சூழ்ந்ததை தொடர்ந்து கொச்சி விமான நிலையம் மூடப்பட்டது. விமான நிலையத்தில் மற்ற சேவைகளும் பாதிப்பு அடைந்துள்ளன. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com