மறைந்த நடிகர் அம்பரீசுக்கு நினைவு மண்டபம் அமைக்க ரூ.5 கோடி நிதி: எடியூரப்பா பேச்சு

மறைந்த நடிகர் அம்பரீசுக்கு நினைவு மண்டபம் அமைக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
மறைந்த நடிகர் அம்பரீசுக்கு நினைவு மண்டபம் அமைக்க ரூ.5 கோடி நிதி
மறைந்த நடிகர் அம்பரீசுக்கு நினைவு மண்டபம் அமைக்க ரூ.5 கோடி நிதி
Published on

பெங்களூரு :

முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் மறைந்த நடிகர் அம்பரீஷ் நினைவு மண்டபம் அமைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் அம்பரீசின் மனைவியும், நடிகையுமான சுமலதா எம்.பி. மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் எடியூரப்பா பேசியதாவது:-

அம்பரீஷ் நினைவு மண்டபம், பெங்களூரு கன்டீரவா ஸ்டுடியோவில் 1.34 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்படுகிறது. இதற்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்படும். இந்த பணிகளை தொடங்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக உயர் அதிகாரி தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும்.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

இந்த கூட்டத்தில் நடிகர் அபிஷேக் அம்பரீஷ், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், மூத்த நடிகர் தொட்டண்ணா, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை செயலாளர் மகேஷ்வரராவ், கமிஷனர் பி.எஸ்.ஹர்ஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com