தொழில் துறையில் முன்னணி மாநிலமாக தமிழகம் உள்ளது - முதலமைச்சர் பழனிசாமி

தொழில் துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக உள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் பழனிசாமி
முதலமைச்சர் பழனிசாமி
Published on

சென்னை:

இந்திய தொழில் கூட்டமைப்பின் 125-வது ஆண்டின் தொடக்க விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

தொழில் துறையில் முன்னணி மாநிலமாக தமிழகம் உள்ளது. இரண்டாம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தமிழகத்திற்கு ரூ.19 ஆயிரம் கோடி முதலீடு கிடைத்துள்ளது. 

ஒற்றை சாளர முறையில் தொழில் தொடங்க நிலவகைப்பாட்டு சான்றிதழ் 50 நாட்களுக்குள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும். 213 தொழில் திட்டங்கள் மூலம் 83.000 வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

தமிழக அரசின் நடவடிக்கையால் தொழில் வளர்ச்சியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com