டி.என்.சே‌ஷன் மரணம்- முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்

முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர், டி.என். சே‌ஷன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
Published on

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர், டி.என். சே‌ஷன் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

சே‌ஷன் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர். இவர் தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றிய காலகட்டத்தில், தேர்தல் நடைமுறைகளில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டுவந்தவர் என்ற பெருமைக்குரியவர். தமிழ்நாடு அரசின் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளை வகித்தவர்.

இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் சே‌ஷனை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

X

Maalai Malar
www.maalaimalar.com