அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
Published on

சென்னை:

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட உடல்நலக் குறைவால், சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று அங்கு சிகிச்சை பெற்றுவரும் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை சந்தித்து அவரிடம் உடல்நலம் பற்றி விசாரித்து அவருக்கு ஆறுதல் கூறினார்.

அங்கிருந்த அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோரிடமும், அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com