

சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
திருச்சி, ஸ்ரீரங்கத்தில் 3148 சதுரஅடி பரப்பளவில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சார் கருவூலஅலுவலகக் கட்டடம் மற்றும் திருவெறும்பூரில் 3148 சதுர அடிபரப்பளவில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சார் கருவூல அலுவலகக் கட்டடம் ஆகியவற்றை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
பதிவுத்துறையின் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையில் 300 சதுரமீட்டர் கட்டட பரப்பளவில் தரை மற்றும் முதல் தளத்துடன் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடியில் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், டி. மாரியூரில் ரூ.3 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டிலும் புதிதாக நிறுவப்பட்டுள்ள மீன் இறங்குதளங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.
தனுஷ்கோடியில் புதிதாக நிறுவப்பட்டுள்ள மீன் இறங்குதளம் மூலம், சுமார் 30 விசை படகுகளை நிறுத்தி மீனவர்கள் மீன்களை நேரடியாக வாகனங்களில் ஏற்றி புதிதாக கட்டப்பட்டுள்ள மீன் ஏலக்கூடத்தில் மீன்களை சுகாதார முறையில் விற்பனை செய்திட இயலும்.
மதுரை பால் பண்ணையில் 1047 சங்கங்களைச் சார்ந்த 29,000 பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில் ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள செயற்கை முறை கருவூட்டல் பயிற்சி மையக் கட்டடம் மற்றும் ரூ. 2 கோடியே 7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 530 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட தானியங்கி பலஅடுக்கு பால் பவுடர் சேமிப்பு கிடங்கு, கோவை பால் பண்ணையில் ரூ. 1 கோடியே 13 லட் சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 600 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட பால் பவுடர் சேமிப்பு கிடங்கு.
சென்னை, அடையாறு, இந்திரா நகரில் 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குளிர் சாதன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள அதி நவீன ஆவின் பாலகம்;
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல் கலைக்கழகத்தின் சார்பில் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் ரூ. 6 கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆதார செல் ஆராய்ச்சி மற்றும் மறுசீரமைப்பு மையக் கட்டடம்; தஞ்சாவூர் மாவட்டம், ஓரத்தநாட்டில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ரூ.1 கோடியே 94 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தீவனப் பதப்படுத்தும் பிரிவுக் கட்டடம் என மொத்தம் 24 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.