ஆர்டிஐ கீழ் தலைமை நீதிபதி இடம்பெறும் வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் நாளை தீர்ப்பு

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தலைமை நீதிபதி அலுவலகமும் வரும் என டெல்லி ஐகோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டு நாளை தீர்ப்பு வழங்குகிறது.
சுப்ரீம் கோர்ட்
சுப்ரீம் கோர்ட்
Published on

புதுடெல்லி:

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அலுவலகமும் வரும் என டெல்லி ஐகோர்ட் தீர்ப்பளித்தது.

டெல்லி ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அலுவலகமும் வரும் என்ற டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பு நாளை வெளியாகும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு நாளை மதியம் 2 மணிக்கு தீர்ப்பு வழங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com