ம.பி.யில் அமைச்சரவையை விரிவாக்கம் செய்தார் சவுகான்: 3 புதிய அமைச்சர்கள் சேர்ப்பு

மத்திய பிரதேசத்தில் இன்று தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்த முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மூன்று புதிய உறுப்பினர்களை சேர்த்துள்ளார்.
ம.பி.யில் அமைச்சரவையை விரிவாக்கம் செய்தார் சவுகான்: 3 புதிய அமைச்சர்கள் சேர்ப்பு
Published on

மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இன்று தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்துள்ளார். பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களான பாலகிருஷ்ணா படிதார், நாராயண் சிங் குஷ்வாலா, ஜலம் சிங் பட்டேல் ஆகியோர் புதிய இணை அமைச்சர்களாக சேர்க்கப்பட்டனர்.

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி கவர்னர் மாளிகையில் இன்று நடைபெற்றது. கவர்னர் ஆனந்திபென் பட்டேல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் சவுகான், மூத்த அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பிப்ரவரி 24-ம் தேதி முங்கோலி, கொலராஸ் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அமைச்சரவையை விரிவாக்கம் செய்தது தேர்தல் நடத்தை விதிமுறைக்கு எதிரானது என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் 2003ம் ஆண்டில் இருந்து பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com