லடாக் எல்லைக்குள் ஊடுருவிய சீன வீரர் சிக்கினார்

லடாக் எல்லையை தாண்டி இந்திய பகுதிக்குள் ஊடுருவிய சீன வீரர் இந்திய ராணுவத்திடம் சிக்கினார்.
லடாக் எல்லைப்பகுதி
லடாக் எல்லைப்பகுதி
Published on

லடாக்:

இந்திய-சீன எல்லைப்பகுதியான லடாக் அருகே சுமர்-டெம்சோக் பகுதியில் இந்திய வீரர்கள் ரோந்து சென்றபோது இந்திய பகுதிக்குள் சீன வீரர் ஒருவர் நுழைந்துள்ளார். அவரை இந்திய ராணுவ வீரர்கள் பிடித்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர் கவனக்குறைவாக எல்லைப்பகுதியில் நுழைந்திருக்கலாம் எனவும், விசாரணைக்கு பிறகு உரிய பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு, அவர் சீன  ராணுவத்திடம் ஒப்படைக்கப்படலாம் என தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com