

பீஜிங்:
விலை மதிப்புமிக்க தந்தத்துக்காக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான யானைகள் கொல்லப்படுகின்றன. இவற்றில், அரியவகையான ஆப்பிரிக்க யானைகள் சுமார் 30 ஆயிரம் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சீனாவில் உள்ள யானை இனங்களை பாதுகாக்கும் வகையில் சர்வதேச அளவிலான யானை தந்தம் விற்பனைக்கு கடந்த 1990-ம் ஆண்டு சீன அரசு தடை விதித்தது.
உள்நாட்டிலும் யானை தந்தங்களை விற்பதும் வாங்குவதும் சட்டவிரோதமான செயல் என கடந்த ஆண்டு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டது. இதை நாட்டு மக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என அந்நாட்டின் பல்துறை பிரபலங்கள் ஊடங்களின் மூலம் பிரசாரங்களில் ஈடுபட்டு வந்தனர்.
அரசின் அனுமதியுடன் நடைபெற்று வந்த 67 யானை தந்தம் தொழிற்சாலைகள் மற்றும் விற்பனை கூடங்கள் இழுத்து மூடப்பட்டன. இதன் விளைவாக கடந்த ஆண்டில் யானை தந்தம் வர்த்தகம் 65 சதவீதம் அளவுக்கு சரிவடைந்தது. மேலும், எல்லைப்பகுதிகள் வழியாக பிறநாடுகளில் இருந்து யானை தந்தம் கடத்தி வருவதும் 80 சதவீதம் குறைந்தது.
இதையடுத்து, யானை தந்தங்களை விற்பதும் வாங்குவதும் சட்டவிரோதம் என்ற விதிமுறை நேற்று (31-12-2017) முதல் பரிபூரணமாக நடைமுறைக்கு வந்தது. இதையடுத்து, நாடு முழுவதும் இயங்கி வரும் மேலும் 105 யானை தந்தம் தொழிற்சாலைகள் மற்றும் விற்பனை கூடங்கள் இழுத்து மூடப்படுகின்றன. #tamilnews #china #ivory