உ.பி: நடிகர் அக்‌ஷய் குமாருடன் இணைந்து பள்ளியை தூய்மை செய்த முதல்-மந்திரி

உத்திரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் சுத்தம் செய்யும் பணியில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் நடிகர் அக்‌ஷய் குமார் இணைந்து தொடங்கி வைத்தனர்.
உ.பி: நடிகர் அக்‌ஷய் குமாருடன் இணைந்து பள்ளியை தூய்மை செய்த முதல்-மந்திரி
Published on

மத்தியில் பா.ஜனதா கட்சி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததும், ’சுத்தமான இந்தியா’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதனால் இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களுக்கு முன்னுரிமை கொடுத்து தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்டப்பட வேண்டும்
என்பதை குறிக்கோளாக கொண்டு சுத்தமான இந்தியா திட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், உத்திரப்பிரதேசம் மாநிலம் லக்னோ நகரில் உள்ள பள்ளிக்கு இன்று காலை முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் சென்றார். அங்கு சென்ற அவர், பள்ளியை தூய்மைப்படுத்தும் பணிகளை தொடங்கி வைத்தார். அவருடன் சென்ற அரசு அதிகாரிகளும் பள்ளியை தூய்மைப்படுத்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com