சிதம்பரத்தில் விபச்சாரத்துக்கு பெண்ணை அழைத்து வந்த 2 வாலிபர்கள் கைது: கார் பறிமுதல்

சிதம்பரத்தில் விபச்சாரத்துக்கு பெண்ணை அழைத்து வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டது.
சிதம்பரத்தில் விபச்சாரத்துக்கு பெண்ணை அழைத்து வந்த 2 வாலிபர்கள் கைது: கார் பறிமுதல்
Published on

சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பஸ் நிலையத்தில் இன்று காலை நகர போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பஸ் நிலையத்துக்குள் அதிவேகமாக ஒரு சொகுசு கார் நுழைந்தது. போலீசார் அந்த காரை வழி மறித்தனர். காரில் ஒரு பெண் உட்பட 2 வாலிபர்கள் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதற்கு அவர்கள் 3 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர்.

சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் 3 பேரையும் சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கார் விசாரணை நடத்தினார். அதில் புதுவை முதலியார்பேட்டையை சேர்ந்த ராஜேந்திரகுமார் (வயது 36), வேலூர் மாவட்டம் ஆற்காடு சாத்தூர் பகுதியை சேர்ந்த சிவகுமார் (29), ராணி பேட்டையை சேர்ந்த ஒரு பெண் என்பதும் தெரிய வந்தது. மேலும் ராஜேந்திரகுமார் மற்றும் சிவகுமார் சேர்ந்து அந்த பெண்ணை விபச்சாரத்துக்காக காரில் அழைத்து வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து ராஜேந்திரகுமார், சிவகுமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். அவர்கள் வந்த 5 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார், ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com