சென்னை ரெயிலில் வெளிமாநில மது பாக்கெட்டுகள் கடத்தல்: 2 பேர் கைது

சென்னை ரெயிலில் வெளிமாநில மது பாக்கெட்டுகள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை ரெயிலில் வெளிமாநில மது பாக்கெட்டுகள் கடத்தல்: 2 பேர் கைது
Published on

வேலூர்:

காட்பாடி ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணையா, காவலர் முகேஷ்மீனா ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பெங்களூரில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்தது.

ரெயில் 2-வது பிளாட் பாரத்தில் நின்றது. பெரிய பைகளை சுமந்தபடி 2 பேர் ரெயிலில் இருந்து இறங்கினர். அவர்களை கண்டதும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இருவரையும் மடக்கி பைகளை சோதனை செய்தனர். அதில் ரம்மு, விஸ்கி ஆகியவற்றை கலந்து செய்யப்பட்ட புதிய வகை மதுபான பாக்கெட்டுகள் அடுக்கி வைத்திருந்தனர்.

வெளிமாநிலத்தில் இருந்து விற்பனைக்காக கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. மொத்தம் 518 பாக்கெட்டுகள் இருந்தன.

அவற்றை போலீசார் பறிமுதல் செய்து மது விலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரனிடம் ஒப்படைத்தனர்.

மது பாக்கெட்டுகளை கடத்தி வந்த காட்பாடி அக்ராவரத்தை சேர்ந்த குமார் (வயது48), காட்பாடி மிஷின் காம்பவுண்ட் சி.எம்.சி. காலனியை சேர்ந்த நேசகுமார் (49) ஆகியோரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com