சுற்றுலா சென்றபோது மீன் பிரியாணி சாப்பிட்ட சென்னை மாணவி உயிரிழப்பு

எர்ணாகுளத்திற்கு சுற்றுலா சென்றபோது மீன் பிரியாணி சாப்பிட்ட சென்னை மாணவி அனாமிகா திடீரென உயிரிழந்தார்.
சுற்றுலா சென்றபோது மீன் பிரியாணி சாப்பிட்ட சென்னை மாணவி உயிரிழப்பு
Published on

கொழிஞ்சாம்பாறை:

சென்னையை சேர்ந்தவர் அமல்வர்மா. இவரது மனைவி உஷாதேவி. இவர்களது மகள் அனாமிகா (வயது 17). பிளஸ்-1 மாணவி. இவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் சென்னையில் இருந்து குடிபெயர்ந்து எர்ணாகுளத்திற்கு வந்தனர்.

நேற்று 3 பேரும் எர்ணாகுளத்திற்கு சுற்றுலா சென்றனர். சுற்றுலா முடித்த பின்னர் அங்குள்ள பிரபல ஓட்டலில் செம்மீன் பிரியாணி சாப்பிட்டனர். சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவிக்கு திடீர் வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அனாமிகா பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கொச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிஜூ கூறும்போது, மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் செம்மீன் பிரியாணி சாப்பிட்டதால் ஏற்பட்ட அலர்ச்சியால் இறந்ததாக கூறப்பட்டுள்ளது.

சிலருக்கு இங்குள்ள முட்டை, பால், மீன் மற்றும் கறிகளால் அலர்ச்சி ஏற்படும் ஓரிரு நாளில் சரியாகி விடும். ஆனால் அனாமிகா சாப்பிட்ட செம்மீன் பிரியாணியில் இருந்த செம்மீன் வி‌ஷத்தன்மை வாய்ந்ததாக இருக்கலாம் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com