மிலாது நபி தினம்: மதுக்கடைகளுக்கு விடுமுறை - சென்னை கலெக்டர் உத்தரவு

மிலாது நபி தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் வரும் 10-ம் தேதி மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
டாஸ்மாக்
டாஸ்மாக்
Published on

சென்னை:

சென்னை மாவட்ட கலெக்டர் சீதாலட்சுமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மிலாது நபி தினத்தை முன்னிட்டு நவம்பர் 10-ம் தேதி மதுபான சில்லறை விற்பனை கடை, பார் கிளப்கள், ஓட்டல்கள் ஆகியவற்றில் எவ்வித மதுபானங்களும் விற்பனை செய்யப்பட மாட்டாது. அனைத்தும் மூடப்பட வேண்டும். உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் உரிமையாளர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com