சிங்கப்பூர்-பாங்காக் செல்ல முயன்ற சென்னை பயணிகள் 2 பேரிடம் ரூ.9 லட்சம் பிடிபட்டது

சென்னை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் மற்றும் பாங்காக் செல்ல முயன்ற பயணிகள் 2 பேரிடம் இருந்து வெளிநாட்டு பணம் ரூ.9 லட்சம் பிடிப்பட்டது.
சிங்கப்பூர்-பாங்காக் செல்ல முயன்ற சென்னை பயணிகள் 2 பேரிடம் ரூ.9 லட்சம் பிடிபட்டது
Published on

ஆலந்தூர்:

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு நேற்று நள்ளிரவு 12.20 மணிக்கு விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்ய இருந்த பயணிகளிடம் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

அப்போது சென்னையை சேர்ந்த அயூப்கான் என்ற பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார்.

அவரது உடமைகளை சோதனை செய்த போது அதில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் பிடிபட்டது.

அவர் சுற்றுலா விசாவில் சிங்கப்பூர் செல்ல முயன்றார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு பாங்காக் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் ஏற வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.

சென்னையை சேர்ந்த பயணியை சோதனை செய்த போது அவர் சுற்றுலா விசா வைத்திருந்தார். அவர் வைத்திருந்த கைப்பையில் ரூ.3 லட்சம் வெளிநாட்டு பணம் பிடிபட்டது. இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com