சவால்கள் இன்னும் முடியவில்லை பதிலடி தர தயாராக இருங்கள் - படையினரை சந்தித்த பாக். தளபதி அழைப்பு

சவால்கள் இன்னும் முடியவில்லை, எதிரியிடம் இருந்து ஏதேனும் அத்துமீறல் உருவானால் பதிலடி கொடுக்க தயாராக இருங்கள் என பாக். விமானப்படை தளபதி முஜாகித் அன்வர் கான் பாக். படையினரை சந்தித்து கூறியுள்ளார். #MujahidAnwarKhan #Pakistan
சவால்கள் இன்னும் முடியவில்லை பதிலடி தர தயாராக இருங்கள் - படையினரை சந்தித்த பாக். தளபதி அழைப்பு
Published on

இஸ்லாமாபாத்:

இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாகிஸ்தான் விமானப்படை தளபதி முஜாகித் அன்வர் கான், நேற்று எல்லைப்புற ராணுவ முகாம்களுக்கு நேரில் சென்றார். அங்கு ராணுவ, விமானப்படை வீரர்களையும், ஊழியர்களையும் சந்தித்து பேசினார்.

பின்னர், அவர்களிடையே பேசுகையில் விமானப்படை தளபதி கூறியதாவது:-

சமீபத்தில் எதிரியுடனான மோதலின்போது, நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க பாகிஸ்தான் விமானப்படை சிறப்பாக செயல்பட்டது. இதற்காக விமானப்படை குறித்து நாடு பெருமைப்படுகிறது.சவால்கள் இன்னும் முடியவில்லை. எனவே, படைகளை உஷாராக வைத்திருங்கள்.

எதிரியிடம் இருந்து ஏதேனும் அத்துமீறல் உருவானால், பதிலடி கொடுக்க தயாராக இருங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com