வீட்டு முன்பு நின்ற பெண்ணிடம் கத்தியை காட்டி செயின் பறிப்பு

கிருஷ்ணகிரியில் வீட்டு முன்பு நின்ற பெண்ணிடம் கத்தியை காட்டி 5 பவுன் செயினை மர்ம நபர் பறித்து சென்றார்.
செயின் பறிப்பு
செயின் பறிப்பு
Published on

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரியில் உள்ள ராஜாஜி நகர் 6-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் சவுந்தர்(34), இவரது மனைவி அனிதா, இவர் நேற்று தனது வீட்டுமுன்பு நின்று கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியே வந்த நபர் முகவரி கேட்ப்பதுபோல் அனிதா அருகே வந்து அவர் கழுத்தில் கத்தி வைத்து 5 பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு பைக்கில் தப்பியோடி உள்ளான். பின்னர் இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுக்கா போலீசில் சவுந்தர் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குபதிவுசெய்து செயின் திருடனை தேடி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com