தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுங்கள் - சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்ட மத்திய அரசு

வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் திருத்தங்களை செய்து சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்புக்கு எதிராக தலித் அமைப்புகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசு கோரியுள்ளது. #BharatBandh
தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுங்கள் - சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்ட மத்திய அரசு
Published on

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு பாதுகாப்பளிக்கும் சட்டமான வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் சில திருத்தங்களை செய்து சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பளித்தது. அதன்படி, இந்த சட்டத்தின் கீழ் அரசு அதிகாரிகளை உரிய விசாரணை இன்றி உடனடியாக கைது செய்ய கூடாது, மேலும் அரசு ஊழியர்களுக்கு இந்த வழக்குகளில் முன் ஜாமீன் வழங்குவதற்கு முழுமையான தடை இல்லை என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தலித் அமைப்புகள் நாடு முழுவதும் இன்று போராட்டம் நடத்தின. வட மாநிலங்களில் போராட்டம் கலவரமாக மாறியுள்ளது. மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் நடந்த மோதலில் 4 பேர் பலியாகினர். பேருந்து, கார் உள்ளிட்ட பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.

இதற்கிடையே, தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய 150 தலித் அமைப்புகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த மனுவை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் இன்று மறுத்து விட்டது. இந்நிலையில், மத்திய அரசும் தீர்ப்புக்கு எதிராக இன்று மனு தாக்கல் செய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com