செவிலியர்களின் சம்பளத்தை முறைப்படுத்துங்கள் - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களுக்கான சம்பளத்தை முறைப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி அறிவுறுத்தியுள்ளார்.
செவிலியர்களின் சம்பளத்தை முறைப்படுத்துங்கள் - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
Published on

புதுடெல்லி:

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களுக்கு போதுமான சம்பளம் தரப்படவில்லை என சமீபகாலமாக தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் செவிலியர் சங்கங்களின் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன.

ஏழாவது சம்பள கமிஷனின் பரிந்துரையின்படி தங்களது சம்பளம் உயர்த்தப்பட வேண்டும் என்பது இவர்களின் போராட்டத்தின் முக்கிய அம்சமாகும்.

இந்நிலையில், பாராளுமன்ற மக்களவையில் இன்று உரையாற்றிய மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களுக்கான குறைந்தபட்ச சம்பளத்தை முறைப்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

செவிலியர்களின் சம்பளத்தை உயர்த்துவது தொடர்பாக அனைத்திந்திய செவிலியர்கள் சங்கத்தின் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த பின்னர், தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களுக்கான சம்பளம் தொடர்பாக தேவைப்பட்டால் மாநில அரசுகள் தனியாக சட்டம் இயற்றவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் ஜே.பி.நட்டா குறிப்பிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com