பொது வேலைநிறுத்தம் - பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 100 சதவீதம் பங்கேற்பு

மத்திய அரசை கண்டித்து 10 தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்தில் கோவையில் 100 சதவீதம் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் பங்கேற்றதாக அச்சங்க மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் கூறினார்.
பிஎஸ்என்எல்
பிஎஸ்என்எல்
Published on

கோவை:

மத்திய அரசை கண்டித்து 10 தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது. இந்த வேலை நிறுத்தத்தில் கோவை மாவட்டத்தில் 100 சதவீதம் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் பங்கேற்றதாக அச்சங்க மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் கூறினார்.

எல்.ஐ.சி. ஊழியர்கள் 98 சதவீதம் பேரும், வங்கி ஊழியர்கள் 60 சதவீதம் பேரும் பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். வங்கி ஊழியர்கள் அந்தந்த வங்கி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com