மதுரையில் இன்று ரெயில் மறியலுக்கு முயன்ற எம்.பி.- தொழிற்சங்கத்தினர் கைது

மதுரையில் தொழிற்சங்கங்கள் சார்பில் தடையை மீறி ரெயில் மறியலுக்கு முயன்ற வெங்கடேசன் எம்.பி. உள்பட 800 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

மதுரை:

மத்திய அரசின் பொருளாதார கொள்கையை கண்டித்து நாடு முழுவதும் இன்று கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன. அதன்படி இன்று மறியல்- ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டன.

மதுரையில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம், ஐ.என்.டி.யூ.சி., ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ரெயில் மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன. அதனை ஏற்று இன்று காலை தொழிற்சங்க நிர்வாகிகள் பெரியார் பஸ் நிலையம் முன்பு திரண்டனர்.

ரெயில் மறியலுக்கு போலீஸ் தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் தொழிற்சங்கத்தினர் திரண்டனர். இதனால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், ஏ.ஐ.டி.யூ.சி. பொருளாளர் நந்தாசிங் மற்றும் தலைவர்கள் வந்ததும், கட்ட பொம்மன் சிலை முன்பிருந்து மறியலுக்கு ஊர்வலமாக புறப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். மறியலுக்கு அனுமதி கிடையாது என கூறினர். தொழிற்சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து கோ‌ஷமிட்டனர்.

மேலும் தடையை மீறி மறியலுக்கும் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். வெங்கடேசன் எம்.பி. மற்றும் 200 பெண்கள் உள்பட 800 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com