சென்டிரல் ரெயில் நிலையம் வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்தல்- 2 பேர் கைது

சென்டிரல் ரெயில் நிலையம் வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்திய வடமாநில வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

சென்னை:

சென்ட்டிரல் ரெயில் நிலைய 8-வது பிளாட் பாரத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து நின்றது.

அப்போது இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் போலீஸ்காரர் புகழேந்தி ஆகியோர் ரெயிலின் முன்பதிவு இல்லாத பெட்டியை கண்காணித்தனர்.

அதில் இருந்த 2 வாலிபர்கள் சந்தேகத்திற்கிடமாக சுற்றி வந்தனர். இதையடுத்து அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது 24 கிலோ கஞ்சா கடத்தி வந்திருப்பது தெரிந்தது.

விசாரணையில் இருவரும் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஜாகீர், அப்சர் என்பது தெரிந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்து கஞ்சா கிடைத்தது எப்படி? யாருக்கு கடத்தி செல்லப்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com