காற்றுமாசை தடுக்க நீண்ட கால திட்டங்களை தயார் செய்யுங்கள்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தலைநகர் டெல்லி, பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் நிலவி வரும் காற்று மாசை தடுக்க நீண்ட கால திட்டங்களை வகுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
காற்றுமாசை தடுக்க நீண்ட கால திட்டங்களை தயார் செய்யுங்கள்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Published on

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் அபாயகரமான நிலைக்கு சென்றுள்ளது, டெல்லியை ஒட்டியுள்ள அரியானா, பஞ்சாப் மாநிலங்களிலும் பனிமூட்டம் அடங்கிய மாசுபாடான நிலை காணப்படுகிறது. பனி காரணமாகவே தெளிவான வானிலையின்மை நிலவுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

காற்றுமாசு காரணமாக கடந்த ஒரு வாரமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. விமானங்கள், ரெயில் சேவையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பகல் நேரங்களில் கூட எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு காற்று மாசு நிலவுகிறது. இதனையடுத்து, காற்று மாசை குறைக்க மூன்று மாநில அரசுகளும் பல்வேறு நடவடைக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன.

இந்நிலையில், இது தொடர்பான மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, காற்று மாசுபாடு குறித்து மத்திய அரசு, டெல்லி, பஞ்சாப் மற்றும் அரியானா மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியது. மேலும், இந்த பிரச்சனையை தடுக்க நீண்ட கால திட்டங்களை வகுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com