காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்- இந்திய ராணுவம் பதிலடி

காஷ்மீர் எல்லைப்பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய ராணுவம் பதிலடி அளித்து வருகிறது.
இந்திய ராணுவம் (கோப்பு படம்)
இந்திய ராணுவம் (கோப்பு படம்)
Published on

ஜம்மு:

ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவம் தரப்பல் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலை தடுக்க, ராணுவம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் தங்தார் மற்றும் கன்ஜல்வான் செக்டார்களில் போர்நிறுத்த ஒப்பந்தங்களை மீறி பாகிஸ்தான் தரப்பில் இருந்து இன்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com