

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் 10, 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன.
மே மாதம் 3-வது வாரத்தில் வெளியாக வேண்டிய தேர்வு முடிவுகள் முன்னதாக எவ்வித அறிவிப்பும் இல்லாமல் திடீரென வெளியானது.
பாராளுமன்ற தேர்தல் முடிவு வருகிற 23-ந்தேதி வெளியாக இருப்பதால் அதற்கு முன்னதாக பள்ளி பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் மத்திய கல்வி வாரியம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
அதன் அடிப்படையில் பிளஸ்-2 தேர்வு முன் கூட்டியே வெளியிடப்பட்டது போல் 10-ம் வகுப்பு தேர்வு முடிவையும் முன்கூட்டியே வெளியிட திட்டமிட்டுள்ளது.
வழக்கமாக பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளிவந்த ஒரு வாரத்தில் 10-ம் வகுப்பு முடிவு வெளிவரும்.
நாளை தேர்வு முடிவுகள் வெளிவருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #CBSE #CBSE10thResults