மந்திரி அனில் தேஷ்முக் மீது சி.பி.ஐ. விசாரணை: சுப்ரீம் கோர்ட்டில் பரம்பீர் சிங் மனு

மராட்டிய உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் மதுபான விடுதி, ஓட்டல்களிடம் இருந்து மாதம் ரூ.100 கோடி மாமூல் வசூலிக்க போலீசாரை கட்டாயப்படுத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறிய முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
மந்திரி அனில் தேஷ்முக்,  பரம்பீர் சிங்
மந்திரி அனில் தேஷ்முக், பரம்பீர் சிங்
Published on

மும்பை :

மராட்டிய உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் மதுபான விடுதி, ஓட்டல்களிடம் இருந்து மாதம் ரூ.100 கோடி மாமூல் வசூலிக்க போலீசாரை கட்டாயப்படுத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறிய முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

மந்திரி அனில் தேஷ்முக் ஆதாரங்களையும், சாட்சியங்களையும் அழிக்கும் முன் அவரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும். நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்காக அவர் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த உடனடியாக உத்தரவிட வேண்டும். மேலும் நான் மும்பை போலீஸ் கமிஷனர் பதவியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டது சட்டவிரோதமானது. எனவே மாநில அரசின் இந்த இடமாற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே இடமாற்றம் செய்யப்பட்ட பரம்பீர் சிங் நேற்று மராட்டிய ஊர்க்காவல் படை டி.ஜி.பி.யாக பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com