சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வர்மா நீக்கம் - நியமனக்குழு முடிவு

டெல்லியில் நடைபெற்ற நியமனக்குழு கூட்டத்தில், சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வர்மாவை நீக்க முடிவு செய்யப்பட்டது. #AlokVarma #CBIDirector
சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வர்மா நீக்கம் - நியமனக்குழு முடிவு
Published on

புதுடெல்லி: 

சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவுக்கும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகள் கூறினர். இதையடுத்து இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிட்டது. இடைக்கால சி.பி.ஐ. இயக்குனராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டார்.

இதை எதிர்த்து அலோக் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதில் அவரை கட்டாய விடுப்பில் அனுப்பியது செல்லாது, மீண்டும் அவரை பணியில் தொடர அனுமதிக்க வேண்டும், ஊழல் விசாரணை முடியும் வரை அலோக் வர்மா கொள்கை முடிவு எதுவும் எடுக்கக்கூடாது என்று கோர்ட்டு தீர்ப்பளித்தது.

இதைத்தொடர்ந்து, அலோக் வர்மா டெல்லி சி.பி.ஐ. தலைமை அலுவலகத்துக்கு வந்து மீண்டும் சி.பி.ஐ. இயக்குனராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா மீதான ஊழல் புகாரில் எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றிய ஆலோசனை டெல்லியில் பிரதமர் இல்லத்தில் நியமனக்குழுவின் ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடைபெற்றது

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் நீதிபதி ஏ.கே.சிக்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் அறிக்கை அடிப்படையில் நியமனக்குழு விவாதித்தது.

கூட்டத்தின் முடிவில், சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வர்மாவை நீக்க முடிவு செய்யப்பட்டது. #AlokVarma #CBIDirector

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com