குட்கா ஊழல் வழக்கு - 2 அதிகாரிகளின் ஜாமீன் மனு நிராகரிப்பு

குட்கா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சிபிஐ நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. #GutkhaScam #CBI
குட்கா ஊழல் வழக்கு - 2 அதிகாரிகளின் ஜாமீன் மனு நிராகரிப்பு
Published on

சென்னை:

தமிழகத்தில் குட்கா ஊழல் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் என பலருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதால் இந்த வழக்கு மிகவும் தீவிரமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த வழக்கில் மாதவராவ் உள்ளிட்ட 5 பேர் கடந்த 7-ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். அதில் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் கலால் வரி கண்காணிப்புத்துறை அதிகாரிகளான செந்தில் முருகன், நவநீதகிருஷ்ண பாண்டியன் ஆகிய இருவரும் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்து இருந்தனர்.

இன்று, அவர்களின் மனுவை விசாரித்த சிபிஐ நீதிமன்றம், ஜாமீன் வழங்க மறுத்து, அவர்களது மனுவை தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் மேலும் ஒரு உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரி சிவக்குமார் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. #GutkhaScam #CBI

X

Maalai Malar
www.maalaimalar.com