பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு - விசாரணை தொடங்கியது சிபிஐ

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் திருநாவுக்கரசு உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்த சிபிஐ இன்று விசாரணையை தொடங்கியுள்ளது. #PollachiAbuseCase #PollachiCase #CBI
பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு - விசாரணை தொடங்கியது சிபிஐ
Published on

சென்னை:

பொள்ளாச்சியில் இளம்பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த வழக்கு தொடர்பாக உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் நியாயம் கிடைக்காது என்று அப்பகுதி மக்களும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சிபிசிஐடி போலீசார் பொள்ளாச்சிக்கு சென்று விசாரிக்கின்றனர். 

இந்த வழக்கில் கைதாகி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருநாவுக்கரசு உள்பட 4 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே, இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. இதற்கு தமிழக அரசும் சம்மதித்து சி.பி.ஐ.க்கு  வழக்கை மாற்றுவது தொடர்பாக அரசாணை வெளியிட்டது.

இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கைதான 7 பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து சிபிஐ இன்று விசாரணையை தொடங்கியுள்ளது. #PollachiAbuseCase #PollachiCase

X

Maalai Malar
www.maalaimalar.com