ரூ.1 லட்சம் லஞ்சம்: வருமான வரித்துறை அதிகாரி மும்பையில் கைது

மும்பையில் வருமான வரி கணக்கு தாக்கல் தொடர்பாக பெண்ணிடம் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வருமான வரித்துறை அதிகாரியை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.
ரூ.1 லட்சம் லஞ்சம்: வருமான வரித்துறை அதிகாரி மும்பையில் கைது
Published on

புதுடெல்லி:

மும்பையை சேர்ந்த ஒரு பெண் கடந்த 2009-10 ஆண்டு தாக்கல் செய்த வருமான வரி கணக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதை தொடர்ந்து அந்த பெண் அவரது சகோதரருடன் இதுதொடர்பாக விசாரிக்கும் அதிகாரியின் முன்னர் கடந்த 2+9-12-2017 அன்று ஆஜரானார். மேற்படி, கணக்கில் இருந்த முறைகேடு மற்றும் குளறுபடிகளை சரிப்படுத்தி அந்த பெண்ணுக்கு சாதகமாக்க ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என்று அந்த அதிகாரி கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக, சி.பி.ஐ. துறைக்கு தகவல் அளித்த அந்த பெண் ஒரு லட்சம் ரூபாய் தர சம்மதித்தார். இந்த தொகையை வருமான வரித்துறை அதிகாரிகள் பெற்றுகொண்டபோது சம்பவ இடத்தில் மறைந்திருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை கையும் களவுமாக கைது செய்தனர்.

மும்பையில் அந்த அதிகாரிக்கு சொந்தமான இடங்களில் இன்று சோதனை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள் அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews #cbiarrested #bribe

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com