நிர்மலாதேவியை மேலும் 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. முடிவு

பேராசிரியை நிர்மலா தேவியை மேலும் 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர். #AruppukottaiProfessor #NirmalaDevi
நிர்மலாதேவியை மேலும் 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. முடிவு
Published on

விருதுநகர்:

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக எழுந்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டார். சாத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 20-ந்தேதி காவலில் எடுத்தனர்.

25-ந்தேதி பகல் 2 மணி வரை பேராசிரியை நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது. அதன்படி விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் பேராசிரியை நிர்மலாதேவியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆனால் பேராசிரியை நிர்மலாதேவி இந்த விவகாரத்தில் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறினாலும் அவர்கள் பெயரை தெரிவிக்கவில்லை.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, மேலாண்மை துறை உதவி பேராசிரியர் முருகன் ஆகியோர் தூண்டுதலின்பேரிலேயே மாணவிகளிடம் பேசியதாக மட்டும் தெரிவித்தார். மற்ற கேள்விகளுக்கு ஆம், இல்லை, ஞாபகம் இல்லை என ஒற்றை வரியிலேயே பதில் அளித்துள்ளார்.

சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு அவர் முழுமையாக ஒத்துழைக்காததால் விசாரணையில் தொய்வு நிலை நீடிக்கிறது. இன்றும் அவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

நாளை (25-ந்தேதி) பேராசிரியை நிர்மலாதேவியை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டி உள்ளது. அப்போது மேலும் 10 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக சி.பி.சி.ஐ.டி. தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வழக்கில் உதவி பேராசிரியர் முருகனுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வரும் நிலையில் கருப்பசாமி தலைமறைவாகவே உள்ளார். #AruppukottaiProfessor #NirmalaDevi

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com