

நெல்லை:
ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், கிழக்கு மாவட்ட தி.மு.க. அவைத்தலைவருமான அப்பாவுவின் மகன் திருமணம் சென்னையில் நடந்தது. நேற்று பணகுடியில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதற்காக அப்பாவு உறவினர்கள் திருமண மண்டபம் அருகே 2 டிஜிட்டல் பேனர்கள் வைத்து இருந்தனர். இதற்கு முறைப்படி அனுமதி எதுவும் வாங்கவில்லை.
இதைத்தொடர்ந்து பணகுடி போலீசார் விரைந்து வந்து 2 டிஜிட்டல் பேனர்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் அனுமதி இல்லாமல் கோர்ட்டு தடையை மீறி டிஜிட்டல் பேனர் வைத்ததாக முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.