ஊரடங்கை மீறிய 312 பேர் மீது வழக்கு - 212 வாகனங்கள் பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய 312 பேர் மீது வழக்குபதிவு செய்த போலீசார் 212 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திண்டுக்கல்:

தளர்வுகளற்ற முழு ஊரடங்கையொட்டி திண்டுக்கல் மகளிர் போலீஸ் நிலையம் முன்பு திண்டுக்கல் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அத்தியாவசிய தேவையின்றி சுற்றித்திரிந்தவர்களை பிடித்து, அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

மேலும் அவர்களிடம் இருந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் மாவட்டம் முழுவதும் நேற்று ஊரடங்கை மீறிய 312 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர்களிடம் இருந்து 212 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com