புனே தேசிய நெடுஞ்சாலையில் கார்-லாரி பயங்கர மோதல்: 3 பேர் பலி

புனே தேசிய நெடுஞ்சாலையில் கார் மற்றும் லாரி நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்துக்குள்ளான காரை படத்தில் காணலாம்.
விபத்துக்குள்ளான காரை படத்தில் காணலாம்.
Published on

புனே:

மகாராஷ்ர மாநிலம் மும்பையில் இருந்து புனே நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் 4 பயணிகளுடன் கார் ஒன்று ராவத் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது நெடுச்சாலையின் மறுபுறம் வந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர மோதலில் காரில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும்  ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். 

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com