சோமாலியா: கார் வெடிகுண்டு தாக்குதலில் தொலைகாட்சி நிரூபர் பலி

சோமாலியாவில் தீவிரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் ஒரு தொலைகாட்சி நிரூபர் உயிரிழந்தார்.
சோமாலியா: கார் வெடிகுண்டு தாக்குதலில் தொலைகாட்சி நிரூபர் பலி
Published on

மொகதிஷூ:

சோமாலியா நாட்டின் தலைநகரான மொகதிஷூவில் உள்ள ஒரு தொலைகாட்சியில் மொகமது இப்ராகிம் கபோவ் என்பவர் நிரூபராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், நேற்று அவர் தனது நண்பரான மொகமது மோவலிம் முஸ்தப் என்பவரிடம் இருந்து ஒரு காரை எடுத்து சென்றுள்ளார்.

அப்போது அந்த காரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு எதிர்பாராத விதமாக திடிரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் மொகமது இப்ராகிம் கபோவ் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்திற்கு காரணம் யார் என்பது தெரியாததால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கபோவ் இந்தாண்டு கொலை செய்யப்பட்ட நான்காவது நிரூபர் ஆவார். நிரூபர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் நாடுகளின் பட்டியலில் சோமாலியா 167-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com