ஈராக்: கார் குண்டு தாக்குதலில் 21 பேர் பலி

ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தின் வடபகுதியில் உள்ள கிர்குக் பகுதியில் இன்று நிகழ்ந்த கார் குண்டு தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பாக்தாத்:

ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தின் வடக்கே சுமார் 240 கிலோமீட்டர் தூரத்தில் கிர்குக் என்ற பெருநகரம் உள்ளது. இப்பகுதியில் குர்த், அராபியர்கள், துருக்மேனிஸ்தான் பகுதியை சேர்ந்த மக்கள் பரவலாக வாழ்ந்து வருகின்றனர். முன்னர் குர்திஸ்தான் போராளிகள் வசமிருந்த இப்பகுதியை கடந்த அக்டோபர் மாதம் ஈராக் படைகள் கைப்பற்றி இருந்தன.

இந்நிலையில், இங்குள்ள முக்கிய நகரமான டுஸ் குர்மாட்டு பகுதியில் இன்று நிகழ்ந்த கார் குண்டு தாக்குதலில் 21 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயம் அடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

படுகாயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுவரும் சிலரது நிலைமை கவலக்கிடமாக உள்ளதால் இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com