குடியுரிமை சட்டம்- இஸ்லாமிய தலைவர்களுடன் அரசு நாளை ஆலோசனை

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் தொடர்பாக இஸ்லாமிய தலைவர்களுடன் தமிழக அரசு நாளை (சனிக்கிழமை) ஆலோசனை நடத்துகிறது.
தமிழக அரசு
தமிழக அரசு
Published on

சென்னை:

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது.

இதையடுத்து குடியுரிமை திருத்த சட்டத்தை தங்களது மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என கேரளா, மேற்குவங்காளம் உள்ளிட்ட சில மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தநிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையிலும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி இன்று 29-வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக இஸ்லாமிய தலைவர்களுடன் தமிழக அரசு நாளை (சனிக்கிழமை) ஆலோசனை நடத்துகிறது.

தலைமை செயலகத்தில் மாலை 4 மணிக்கு அரசு தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்துகிறார். கூட்டத்தில் கலந்துகொண்டு குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான தங்களது கருத்துக்களை கூறுமாறு தலைமை செயலாளர் சண்முகம் அழைப்பு விடுத்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com