இந்த ஆண்டிற்கான ஐ.பி.ஓ-வை வெளியிட மாட்டோம்: OpenAI தலைமை நிர்வாக அதிகாரி

இந்த ஆண்டில் பங்கு வெளியீடு இல்லை என சாம் ஆல்ட்மேன் அறிவித்துள்ளார்.
OpenAI IPO Decision
Published on
Summary

செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் வெளியிட்ட மேம்பட்ட மாதிரிகளை தொடர்ந்து, ஆசிய வர்த்தகத்தின் பங்குகள் கடுமையான சரிவை சந்தித்தன. இதையடுத்து செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், ஏ.ஐ வெளியிடும் மாதிரிகளை கட்டுப்படுத்துமாறு ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தமைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

xAI என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை அதன் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் மற்றும் Open AI செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை அதன் தலைமை நிர்வாக அதிகாரியான சாம் ஆல்ட்மேன் ஆகியோர் நிர்வகித்து வருகின்றனர்.

2022-இல் OpenAI நிறுவனம் ChatGPT-ஐ வெளியிட்டதில் இருந்து, உலகளாவிய பங்குகளில் பெருமளவில் ஏற்பட்ட ஆதாயங்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொடர்பான மாதிரிகளே காரணமாக அமைந்தன.

இதையடுத்து சமீபகாலமாக கட்டுப்பாட்டை மீறிய செயற்கை நுண்ணறிவு மையங்களின் தரவுகள் மீது பொதுமக்களின் அதிருப்தி அதிகரித்து வருகிறது.

ஜப்பானில் வர்த்தகம் தொடங்கியபோது, OpenAI முதலீட்டாளரான சாஃப்ட்பேங்கின் பங்குகள் 13.2 சதவீதம் வரை சரிவை சந்தித்தன. மேலும், மெமரி சிப் தயாரிப்பாளரான கியோக்சியா ஆரம்பத்தில் 9.8 சதவீதம் சரிந்ததோடு, மற்றொரு சிப் நிறுவனமான டோக்கியோ எலக்ட்ரான் 3.7 சதவீதம் சரிவை சந்தித்தது.

தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம் 1.2 சதவீதமும், தென்கொரியாவை சேர்ந்த SK hynix நிறுவனம் 5.3 சதவீதமும் மற்றும் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் 3.7 சதவீதமும் சரிவை சந்தித்தது.

ஷாங்காயில் மெமரி சிப் தயாரிப்பாளரான CXMT 2.7 சதவீதம் சரிந்த நிலையில், செமிகண்டக்டர் மேனுஃபேக்சரிங் இன்டர்நேஷனல் கார்ப்பரேஷன் 1.4 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.

ஹாங்காங்கில், சோங்ஜி இன்னோலைட் 4.1 சதவீதம் சரிந்தது, அதே நேரத்தில் மினிமேக்ஸ் 5.4 சதவீதமும்; Z.ai நிறுவனத்தின் பங்குகளும் 0.5 சதவீதம் வரை சரிந்தன.

செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களுக்கு வேண்டுகோள்

இந்த நிலையில் செயற்கை நுண்ணறிவு தவறாக பயன்படுத்தப்படும் என்ற அச்சங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதன் மாதிரி திறன்களை மேம்படுத்தும் வேகத்தை குறைக்குமாறு, செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களுக்கு ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டாரியோ அமோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து பொருளாதார நிபுணர் தகாயுகி மியாஜிமா கூறுகையில், செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டின் வேகத்தைக் குறைக்குமாறு வார இறுதியில் வெளியான தொடர்ச்சியான கருத்துக்களைத் தொடர்ந்து,

டோக்கியோவில் செயற்கை நுண்ணறிவு மற்றும் குறைக்கடத்தி (semiconductor) தொடர்பான பங்குகளில் விற்பனை அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

OpenAI நிறுவனர்

OpenAI நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆல்ட்மேன், இந்த ஆண்டு தங்களது நிறுவனம் ஐபிஓ-க்களை (IPO) தொடராது என தெரிவித்துள்ளார்.

மேலும் ,செயற்கை நுண்ணறிவால் மனித இனம் அழிந்துபோகும் அபாயங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனவும் ஆல்ட்மேன் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com