

கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கத்துடன் காணப்படுகிறது. ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.1,05,760-க்கும், கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.13,220-க்கும் விற்பனையானது. 2-ந்தேதி ஒரு சவரன் ரூ.1,05,760-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.13,220-க்கும் விற்பனையானது. நேற்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,06,000-க்கும், கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.13,250-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,05,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.13,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கடந்த 28-ந்தேதி முதல் மாற்றம் இல்லாமல் விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
03-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,000
02-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,760
01-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,760
31-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,040
30-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,840
03-08-2026- ஒரு கிராம் ரூ.235
02-08-2026- ஒரு கிராம் ரூ.235
01-08-2026- ஒரு கிராம் ரூ.235
31-07-2026- ஒரு கிராம் ரூ.235
30-07-2026- ஒரு கிராம் ரூ.235