GOLD PRICE TODAY: வார தொடக்கத்திலேயே தங்கப் பிரியர்களுக்கு அதிர்ச்சி: அதிரடியாக உயர்ந்த விலை!

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.
Gold
Published on

தங்கம் விலை கடந்த 23-ந்தேதி வரை உயர்ந்து வந்த நிலையில், 24-ந்தேதி குறைந்தது. அதன்படி, ஒரு கிராம் ரூ.13,230-க்கும், ஒரு சவரன் ரூ.1,05,840-க்கும் விற்பனையானது. 25-ந்தேதி தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,300-க்கும், சவரனுக்கு ரூ.560-ம் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,400-க்கும் விற்பனை ஆனது. நேற்றும் இதே விலையில் விற்பனையானது.

தங்கம் விலை உயர்வு

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வாரத்தின் முதல்நாளான இன்று உயர்ந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,06,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13,370-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

26-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,400

25-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,400

24-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,840

23-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,000

22-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,07,440

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

26-07-2026- ஒரு கிராம் ரூ.240

25-07-2026- ஒரு கிராம் ரூ.240

24-07-2026- ஒரு கிராம் ரூ.240

23-07-2026- ஒரு கிராம் ரூ.245

22-07-2026- ஒரு கிராம் ரூ.245

X

Maalai Malar
www.maalaimalar.com